News November 25, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
Similar News
News January 20, 2026
விழுப்புரம்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி பெறுவது எப்படி?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!
News January 20, 2026
விழுப்புரம்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News January 20, 2026
BREAKING: விழுப்புரத்தில் கூண்டோடு கைது!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று (ஜன.20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலமுறை ஊதியம், ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அனைவரையும் கூண்டோடு கைது செய்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறினார்கள்.


