News August 21, 2024

இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல் ஆணையரிடம்புகார்

image

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான்‌ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் புத்த மதத்தை உயர்த்தி காட்டுவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

சென்னையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

சென்னை மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News January 18, 2026

சென்னை: சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நேற்று இரவு இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், டூவீலர் ஓட்டி வந்தவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 18, 2026

சென்னை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இதற்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கின் <<>>மூலம் பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்பண்ணுங்க. வேலை தேடும் ஒருவருக்காவது யூஸ் ஆகும்!

error: Content is protected !!