News August 20, 2024
இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான ரவுடி மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா பேசியுள்ளதால், மொட்டை கணேசனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அடுத்தகட்டமாக, இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 24, 2026
திருவள்ளூர் மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)
News January 24, 2026
திருவள்ளூரில் கழுத்தை அறுத்த காதலன்!

விருதுநகரைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(38). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவருக்கும் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஓர் பெண்ணிற்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில், அப்பெண் வேறு பல ஆண்களுடன் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த மாரியப்பன், அவரின் கழுத்தை அறுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண், தாயை சிகிச்சைக்கு அனுமதித்து, மாரியப்பனை கைது செய்தனர்.
News January 24, 2026
திருவேற்காடு: மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு (23.01.2026) திருவேற்காடு சிந்தி கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சாலை விதிகள் மற்றும் விபத்தில்லா பயணம் குறித்து மாணவர்களுக்கும், பட்டாபிராம், எண்ணூர் தொழிற்சாலை பணியாளர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.


