News November 30, 2024

இப்படி ஒரு காவல் நிலையமா என வியப்படைந்த எஸ்.பி

image

காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆய்வு செய்தார். அதில் காவல் நிலையத்தில் மரக்கன்று நட்டு வைத்து அங்கு சுற்றுப்புற சுவர்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள், தத்துவங்கள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு பதிவேடுகள், குற்ற பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

Similar News

News November 9, 2025

5 மையங்களில் 2ம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர் பணிக்கு ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு விருதுநகர் மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் காரியாபட்டி செவல்பட்டி ஆகிய 5 மையங்களில் 7403 ஆண்களும், 2339 பெண்களும் என மொத்தம் 9742 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

News November 8, 2025

சிவகாசி மக்களே; தவறவிடாதீங்க!

image

சிவகாசி ஐயப்பன் கோயில் வளாகத்தில் வைத்து வரும் 10, 11 ஆகிய 2 நாட்கள் இலவச புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஆண், பெண் இருபாலருக்குமான புற்றுநோய் கண்டறியும் சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 9443125930, 9443378412, 9843024209 ஆகிய அலைப்பேசி எண்களுக்கு அழைத்து முன்பதிவு செய்யலாம்.

News November 8, 2025

சிவகாசி: 134 பேர் பலி.. நடவடிக்கை தேவை

image

சிவகாசி பகுதியில் இன்னும் சில தினங்களில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக தொடங்க உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேலான பட்டாசு விபத்துகளில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பட்டாசு தொழிலை முடக்காமல், மத்திய, மாநில அரசுகள் பட்டாசு ஆலைகளின் விதிமீறல்களை கட்டுப்படுத்தி தவறுகளை சரி செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.

error: Content is protected !!