News November 19, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News January 14, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>’கிளிக்’<<>> (அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT

News January 14, 2026

நாமக்கல்-சேலம் சாலையில் பயங்கரம்!

image

நாமக்கல்-சேலம் சாலை, சாமிநகரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி குருநாதன் (70). இவர் தனது டூவீலரில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குருநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 82.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!