News November 19, 2025

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News January 17, 2026

நாமக்கல்லில் கோடிக்கணக்கில் மது விற்பனை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 169 டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.4 கோடி வரை இருக்கும் விற்பனை, கடந்த 15-ம் தேதி மட்டும் ரூ.7.70 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், அரசு விழாவை முன்னிட்டு ஜேடர்பாளையம் பகுதியில் 11 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் இந்த சாதனை விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 17, 2026

குமாரபாளையத்தில் துணிகர சம்பவம்!

image

குமாரபாளையம் ராஜராஜன் நகரைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், செந்தில்குமார் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!