News January 12, 2025

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஜன.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளான சென்னை முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 11, 2025

சென்னை: திருமாவளவன் பேனரால் சர்ச்சை

image

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, சென்னை மிண்ட் தங்கசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் தொல் திருமாவளவனை “வருங்கால முதல்வர்” எனக் குறிப்பிடும் பேனர் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

News November 11, 2025

சென்னை: லைசன்ஸ் இல்லையென்ற கவலை இனி இல்லை

image

சென்னையில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

SIR: சென்னையில் 40% பணி முடிந்தது

image

சென்னை, 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, திங்கட்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 40.8% வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரம் மற்றும் திரு.வி.கா. நகரில் விநியோகம் குறைவாக நடந்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!