News October 9, 2024

இன்று காவல் ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.08) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட பகுதிகளில் போலீசார் உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

செங்கோட்டை – நெல்லை ரயில் 13 நாட்கள் ரத்து

image

நெல்லை ரயில் நிலைய 6வது பிளாட்பாரம் அமைக்கும் பணி காரணமாக செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் ரயில் நெல்லையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரயில் ஆகியவை சேரன்மகாதேவி – நெல்லை – சேரன்மகாதேவி இடையே இன்று 13ம் தேதி மற்றும் 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 25, 26, 28, 29 ஆகிய தேதிகளில் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

தோரணமலை கோவிலில் நாளை வருண கலச பூஜை

image

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நாளை நவ.14 காலை வருண கலச பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் மலை உச்சியில் இருந்து பக்தர்கள் கிரக குடம் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற உள்ளது.

News November 13, 2025

தென்காசி: சுகாதார நிலையத்தில் பணியிடம் விண்ணப்பியுங்க!

image

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் கீழ் காலியாக உள்ள ICTC Counsellor தற்காலிக பணியிடங்களில் பணியாளர்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளார். பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://tenkasi.nic.in/notice_category/recruitment/60 தகவல்.

error: Content is protected !!