News August 18, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக 18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சி 18ம் வார்டு பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமான் நகர் சமுதாயக் கூடத்திலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பிலியவயல் ஊராட்சி வம்பரம்பட்டி சமுதாயக் கூடத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் உள்ள வசந்தம் திருமண மகாலில் நடைபெற உள்ளது.

Similar News

News December 13, 2025

புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டஇரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 12, 2025

BREAKING: புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் நிலம் தொடர்பான பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த லஞ்சஒழிப்பு துறையினர் சங்கரை கையும் களவுமாக கைது செய்தனர்.

News December 12, 2025

புதுக்கோட்டை: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!