News January 24, 2026
இனி பேங்க் Cheque-ல் இப்படி எழுதக்கூடாதா?

பேங்க் செக் எழுதுவதற்கு கருப்பு இங்க் பயன்படுத்த கூடாது என SM-ல் தகவல் பரவிவருகிறது. ஆனால், அதனை முற்றிலுமாக மறுத்து மத்திய உண்மை சரிபார்ப்பு குழு பதிவிட்டுள்ளது. RBI-ன் விதிமுறைகளின் படி, வாடிக்கையாளர்கள் நிரந்தர மையை பயன்படுத்த மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள். அது எந்த கலர் பேனாவாக வேண்டுமானலும் இருக்கலாம். இது போன்ற தகவல்களை நம்பிவிட வேண்டாம். SHARE.
Similar News
News February 16, 2026
BREAKING: தேர்தல்.. அறிவித்தார் பிரேமலதா

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் பிப்.20 முதல் நேர்காணல் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிப்.22 வரை நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை, தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால், <<19154188>>NDA-வில்<<>> அவர் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 16, 2026
SK நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதான்!

RKFI தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கான பெயர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான போஸ்டரில், சிவா கையில் அரிவாள், நெற்றியில் பட்டை, முறுக்கு மீசை என கம்பீரமாக இருக்கிறார். ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரை செங்குத்தாக பார்த்தால், முதல் எழுத்து ஓம் என்பதை பிரதிபலிக்கிறது.
News February 16, 2026
புதுச்சேரியிலும் தவெகவுக்கு ‘விசில்’

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தைக் கோரி தவெக விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, NDA-வில் தொடர்வதாக ரங்கசாமி அறிவித்துவிட்டதால் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


