News November 25, 2025
இந்த மெசேஜை நம்பாதீங்க.. ரசிகர்களை எச்சரித்த ரகுல்!

Whatsapp-ல் தனது பெயரில் வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் எச்சரித்துள்ளார். இது குறித்து அவரின் X தள பதிவில், சில மெசெஜ்களின் Screenshot-ஐ பகிர்ந்து, இப்படி யாராவது தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த நம்பரை Block செய்யவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, இது போன்று நடிகைகள் ருக்மணி வசந்த், அதிதி ராவ் ஆகியோரின் பெயரிலும் Whatsapp-ல் போலியாக மெசேஜ்கள் பரவின.
Similar News
News January 23, 2026
‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தில், *2005-ல் கொண்டுவரப்பட்ட MGNREGA திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர வேண்டும். *மாநில அரசு 40% நிதி பங்கீட்டை நீக்க வேண்டும். *இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ₹2,113 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

டிரம்ப்பின் கோபத்துக்கு ஆளான கனடா

அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார் டிரம்ப். காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இந்த அமைப்பில் இணைய அனைத்து நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொருளாதார பலம் மற்ற நாடுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மாறியுள்ளது என கூறி இதில் சேர மறுத்தார் கனடா PM கார்னி. இதனால் டென்ஷனான டிரம்ப், அந்நாட்டுக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றார்.