News January 14, 2025

இந்த பொங்கலை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்களின் பொங்கல் கொண்டாட்டத்தை way2news-ல் பதிவிடலாம். இந்த தை பொங்கலுக்கு உங்கள் வீட்டில் அலங்கரித்து வைக்கப்படும் பொங்கல் பானையைப் புகைப்படம் எடுத்து, உங்களின் பெயர், ஊர், மாவட்டம் ஆகியவற்றைப் பதிவிட்டு நமது way2news app மூலம் அனுப்பலாம். இதை எப்படி பதிவிடலாம் என்பதை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. way2news-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Similar News

News December 9, 2025

தேனி: ஆற்றிற்குள் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவர் நேற்று (டிச.8) மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீரென மயங்கிய கிருஷ்ணன் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

தேனியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

தேனி: கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்

image

காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக கணினி இயக்குநராக பணிபுரிந்தவர் 3 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர பணியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்த ஆய்வில் அந்த பணியாளர் முறைகேடாக நிரந்த பணியாளராக மாற்றியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறி எரசக்கநாயக்கனுார் கூட்டுறவு சங்க செயலாளர் ராமரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நர்மதா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!