News June 18, 2024
இந்திய விமானப்படைக்கு ஆட்கள் சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கு அக்னி வீர் வாயு திட்டம் மூலம் ஆட்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.8 முதல் ஜீலை. 28 வரை விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
தூத்துக்குடி: இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

தூத்துக்குடி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..
News January 19, 2026
தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் நியமனம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சகயராஜ், தூத்துக்குடி வடக்கு பெருமாள் சாமி, தூத்துக்குடி தெற்கு அமிர்தராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 19, 2026
தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, சோளம், கம்பு போன்ற பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது. விதைகளை காய வைக்கும் போது ஈரமான, அழுக்கான மண் தளத்தில் போடக்கூடாது. அப்படி போட்டால் விதையின் தரம் குறைந்து விடும் என மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஷேக் அறிவுறுத்தியுள்ளார்.


