News June 2, 2024
இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் நடந்த கொடுமை

‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிளாஸ்டர் பாரிஸால் செய்யப்பட்ட கமல் உருவங்களை தலையில் தாங்கிக் கொண்டு நிற்க மனிதர்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், 4 மணியிலிருந்து ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில்கூட வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 8, 2025
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடியான தினேஷ்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், கொலை, செம்மர கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகளில் தொடர்புடையவர். மேலும், ஆந்திரா, கர்நாடக போன்ற அண்டை மாநிலங்களிலும் இவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 2/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, போரூர், காரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், நடேசன் ரோடு, நடுக்குப்பம், மையிலாப்பூர், ஆர்.கே.சாலை, சிட்லப்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், அடையாறு, சாஸ்திரி நகர், டீச்சர்ஸ் காலனி, செம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்
News July 8, 2025
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு 1/2

சென்னையில் இன்று (ஜூலை 8) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கே.கே நகர், அசோக் நகர், வடபழனி, பி.டி ராஜன் சாலை, ராணி அண்ணா நகர், சைதாப்பேட்டை ரோடு, காமராஜர் சாலை, நடேசன் சாலை, 100 அடி ரோடு, ஆற்காடு ரோடு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள். <<16986157>>தொடர்ச்சி<<>>