News August 21, 2024
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

கேஆர்பி அணைப் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கு இலவசமாக 30 நாட்கள் தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள 8ம் வகுப்பு படித்த பெண்கள் வருகிற 27ஆம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். 9442247921, 9080676557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
கிருஷ்ணகிரி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

கிருஷ்ணகிரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 17, 2026
ஓசூர்: அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்

ஓசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரகிபுல் உசேன் (39) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று (ஜன.16) காலையில் அவரது நிறுவனத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மத்திகிரி போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
கிருஷ்ணகிரி: இனி நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

கிருஷ்ணகிரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!


