News May 15, 2024

ஆவடி: நகை கடை கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

image

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் நடத்தி வந்த நகைக்கடையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மர்ம கும்பல் துப்பாக்கியால் மிரட்டி ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை ஏற்கனவே கைது செய்து 88 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த பஜன்லால் (26) என்பவரை கைது செய்துள்ளனர்.

Similar News

News November 10, 2025

திருவள்ளூர்: ரயில்வே துறையில் 3058 காலியிடங்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் காந்திநகர் பகுதியில் போதை மாத்திரை வைத்திருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சோதனை செய்த போது காந்திபுரம் பகுதியைச் சார்ந்த கமலக்கண்ணன் (22) பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ய வைத்திருந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்து 88 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

News November 9, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் (9.11.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

error: Content is protected !!