News August 7, 2024
ஆவடியில் ரூ.51 லட்சம் நில மோசடி

ஆவடி அருகே தண்டுரை கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (65) என்ற ஓய்வுப் பெற்ற விஞ்ஞானிக்கு ரூ.51 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (53), பால்ராஜ் (29) ஆகியோர் பரசுராமன் என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ளனர். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், பால்ராஜ் ஆகியோரை இன்று (ஆக.7) கைது செய்தனர்.
Similar News
News November 17, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக கணக்கெடுப்பு படிவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை பூர்த்தி செய்வதற்கு அவரவர் வாக்குச்சாவடி மையங்களில் நவ-18 முதல் நவ-20 வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது.

திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!