News October 14, 2025
ஆளூர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.
Similar News
News November 16, 2025
குமரி: ரூ.8 லட்சம் மோசடி.. தாய், மகள் கைது

சேலம் இளம்பிள்ளை பகுதி நாகராஜன் ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம் குளச்சல் மெஜிலா (41) இவரது மகள் ஷானிகா (20) ஆகியோர் ஆன்லைனில் ஜவுளி வாங்கி ஜிபேயில் பணம் அனுப்பி உள்ளனர். ரூ.1 அனுப்பி ஸ்கிரீன் ஷாட்டில் திருத்தி முழுதொகை அனுப்பியதாக நாகராஜனை நம்ப வைத்துள்ளனர். ரூ.8 லட்சம் மோசடி செய்திருப்பதை தெரிந்த நாகராஜன் சேலம் போலீசில் அளித்த புகார்படி நேற்று தாய், மகள் நேற்று கைதாகினர்.
News November 16, 2025
குமரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

குமரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


