News March 27, 2024
ஆலத்தூர்: விவசாயி தூக்கிட்டு தற்கொலை

ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
பெரம்பலூரில் புதிய வருவாய் அலுவலர் பதவி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ-13) புதிய வருவாய் அலுவலராக கண்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருவாய் மாவட்ட சங்க தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் மரியாதை நிமித்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
News November 13, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <


