News May 4, 2024

ஆலங்குடியில் இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை

image

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.. கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Similar News

News November 12, 2025

திருவாரூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி

image

குடவாசலைச் சேர்ந்த உத்திராபதி (70) மற்றும் அவரது மனைவி சாந்தா (60) இருவரும் பைக்கில் திருவாரூர் – கும்பகோணம் மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பைக்கை ஒட்டி சென்ற உத்திராபதி திடீரென்று மயக்கம் ஏற்பட்டு விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடவாசல் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 12, 2025

திருவாரூர் இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 11, 2025

திருவாரூர்: ஆட்சியர் அலுவுலகத்தில் நடைபெற்ற கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவம்பர்-11) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் வட்டாட்சியர்களுக்கும் சிறப்பு இணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக பயிற்சி நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு வ மோகனசுந்தரம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!