News August 19, 2024
ஆற்காடு அருகே பெண் எஸ்.ஐ. படுகாயம்

ஆற்காடு அடுத்த திமிரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் உஷா. இவர் நேற்று இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு இன்று அதிகாலை ராணிப்பேட்டை காவல் குடியிருப்பு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 4 மணிக்கு ஆற்காடு அண்ணா சாலை எதிரே மின்கம்பத்தில் கார் மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உஷா படுகாயம் அடைந்து ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
ஆற்காடு வட்டத்தில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

இராணிப்பேட்டை இன்று (ஜன.23) பள்ளிக் கல்வித் துறை சார்பில் “செழிப்பான தொகுதி வளர்ச்சி திட்டம்” கீழ் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். ஆற்காடு வட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பித்தனர்.
News January 23, 2026
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஜன.23 ஆம் தேதி தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
News January 23, 2026
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக சிறப்பு முகாம் நாளை ஜன- 24 காலை 10 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.குடும்ப அட்டைதாரர்கள் பெயர் திருத்தம் பெயர் சேர்த்தல், புதிய அட்டை கோருதல்,முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட முகாமில் திருத்த பணிகள் நடைபெறுகிறது.இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


