News August 23, 2024
ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

விருதுநகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சுந்தரராஜன் என்பவர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்த மைதின் பாட்ஷா என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொலை குற்றவாளி சுந்தரராஜன் என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 16, 2025
விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் “அறிவும் வளமும்” என்ற பொருண்மையின் கீழ் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(16.11.2025) பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
News November 16, 2025
விருதுநகர்: போக்சோவில் 11-ம் வகுப்பு மாணவன் கைது

நரிக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார், சிறுவனை மதுரை சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


