News October 10, 2024
ஆம்லெட் போட்டு தர மறுத்த காவலாளி கொலை

செட்டிபாளையம் அருகே ஆம்லெட் போட்டு தர மறுத்த காவலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது. தனியார் நிறுவனத்தில் காவலாளிகளாக ஷெரிப், ஜோசப் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷெரிப்பிடம் ஜோசப் ஆம்லெட் போட்டு தருமாறு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜோசப் ஷெரிப்பை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி ஷெரிப் உயிரிழந்தார். ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
கோவையில் சோக சம்பவம்!

மதுரையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகள் தேவிப்பிரியா, கோவை வைசியால் வீதியில் உள்ள மாமா சந்திரகுமார் என்பவரது வீட்டில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 8, 2025
கோவை: GAS சிலிண்டர் இருக்கா?

கோவை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!


