News April 2, 2025
ஆம்பூர் பிரியாணியின் ருசிக்கு காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பிரியாணிக்கென உள்ள தனித்துவமான ஸ்பாட்டுகளில் முக்கியமான ஊர் ஆம்பூர் பிரியாணி.தொடக்கத்தில் நவாப் படைவீரர்களுக்கு உணவளிக்க சமைக்கப்பட்ட பிரியாணி இன்று பலரின் விருப்ப உணவாக உள்ளது. ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும், சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்பட்டு சற்றே செம்மஞ்சளாக இருப்பது கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.ஷேர் பண்ணுங்க
Similar News
News January 17, 2026
திருப்பத்தூர்: சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

ஜோலார்பேட்டை செம்மூர் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் 2024-ல் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். சிறுமியின் வயது மற்றும் திருமணம் குறித்து அறிந்த டாக்டர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 17, 2026
திருப்பத்தூர்: வாலிபர் விபரீத முடிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் பகுதியியை சேர்ந்த வாலிபர் பிரவின். நேற்று (ஜன.16) பிரவினின் பெற்றோர் இவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரவின், துளசி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் இன்று (ஜன.17) காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் சப்-டிவிஷன்களில் பலத்த போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அவசர கால உதவி தேவைப்பட்டால், அந்தந்த பகுதிகளில் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


