News April 13, 2024

ஆம்பூர் அருகே விபத்து

image

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 8, 2025

திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

image

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 8, 2025

திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

image

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News November 8, 2025

திருப்பத்தூர்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

image

1)திருப்பத்தூர் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.

2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.

3)இதற்கு<> Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம்.

4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.

இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!