News November 26, 2025
ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.
Similar News
News January 22, 2026
தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து

தேனி மாவட்டம் பெருமாள்கவுண்டன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி – தேவாரம் இடையே கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி A.K.K. ரஜினி, கூடுதல் பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான அறிக்கையை போக்குவரத்து அதிகாரிகள் இன்று நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
News January 22, 2026
தேனி: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 22, 2026
தேனி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

தேனி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <


