News August 24, 2025

ஆண்டிபட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.

Similar News

News January 18, 2026

தேனி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். தேனி மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் Contact-ல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை…!

image

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி (70). வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் ஜன.14 அன்று மதுவுடன் விஷம் கலந்து குடித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 18, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

தேனி மாவட்டம், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.19) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!