News August 6, 2024

ஆணழகன் போட்டியில் விளாத்திகுளம் இளைஞர் வெற்றி

image

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஆண்களுக்கான உடல் கட்டுதல் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான உடற்பயிற்சி பெற்ற ஆண்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்றில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு போட்டி நடத்தும் சமூக கட்டளை சார்பில், பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Similar News

News November 7, 2025

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 6, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓ-க்கள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்செந்தூர் பிடிஓ, உடன்குடி அலுவலகத்திற்கும், உடன்குடி பிடிஓ இப்ராஹிம் சுல்தான், கயத்தார் அலுவலகத்திற்கும், கயத்தார் பிடிஓ வெங்கட்ராமன், தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலக ஊராட்சி அலுவலகத்திற்கும் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 6, 2025

தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கே கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!