News April 3, 2025
ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம்: எஸ்.பி வாழ்த்து

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி கோயம்புத்தூரில் கடந்த மார்ச்.29-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News January 25, 2026
கடலூர்: திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஜன.24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பல பகுதிகளில் மின்மாற்றிகளை திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 25, 2026
கடலூர் மாவட்டத்தில் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 25) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் 18.9 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 17.4 மில்லி மீட்டர், வடக்குத்து 16 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி, வானமாதேவி தலா 11 மில்லி மீட்டர், பண்ருட்டி 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 143.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News January 25, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


