News November 20, 2024

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

மணப்பாறை அருகே உள்ள ஆனாம்பட்டியைச் சேர்ந்த சந்திரா என்பவர் நேற்று அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தனி நபருக்கு சொந்தமான கிணற்றுக்குச் செல்லும் வயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 7, 2025

திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
அதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இதில், மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

திருச்சி: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

image

திருச்சி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிற்க வேண்டாம். வீட்டில் இருந்தே மாற்றும் வழியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த <>ஆதார் செயலியை<<>> பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 6, 2025

திருச்சி: அரசு பஸ் – கார் மீது மோதி விபத்து

image

மணப்பாறையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வடசேரி பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!