News August 23, 2025
ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Similar News
News January 23, 2026
தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

தஞ்சை திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க !
News January 23, 2026
தபால் நிலையத்தில் பாலிசிதாரர்களுக்கு சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட தபால் துறை முதல் நிலை கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில், காலாவதியான பாலிசிகளை சலுகைடன் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பாலிசிதாரர்கள் தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
தஞ்சை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <


