News November 10, 2024

அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது

image

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News

News November 8, 2025

கோவை: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

1) கோவை மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இந்த தகவலை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 8, 2025

BREAKING: பொள்ளாச்சி அருகே விபத்து 2 பேர் பலி

image

பொள்ளாச்சி, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். அவரது மனைவி ஜோதி. மகள் சந்தியா, பேத்தி கனிஷ்கா மற்றம் ஒன்றரை வயது ஆண் குழந்தை என 5 பேரும் ஒரே பைக்கில் சென்றனர். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் முருகேஷ், கனிஷ்கா இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 8, 2025

கோவை: 10,000 பேருக்கு உடனடி வேலை

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நவ.29-ம் தேதி அன்று G.N.மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 80563-58107 என்ற எண்ணை அழைக்கவும். (SHARE)

error: Content is protected !!