News November 9, 2025
அருப்புக்கோட்டை பைபாஸ் அருகே பஸ் விபத்து

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ் ராமசாமிபுரம் விளக்கு பகுதியில் இன்று விபத்து ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியது. இதில், சிலர் லேசாக காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.
Similar News
News December 7, 2025
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை கடித்து குதறிய நாய்கள்

காரியாபட்டியில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் மாலை வீடு திரும்ப மந்திரி ஓடை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தனர். அப்போது, அங்கு சுற்றி திரிந்த நாய்கள் 4 மாணவிகள், பெரியவர் ஒருவரை கடித்தது. அதே போல் ஆவியூர், டி.வேப்பங்குளம், வக்கணாங்குண்டு கிராமங்களில் 5க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நாய்களை அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை வைகின்றனர்.
News December 7, 2025
விருதுநகர் அருகே பெண் தற்கொலை

திருத்தங்கல்-பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். சுப்புலட்சுமி தம்பதி (வயது 55). மாரியப்பன் குடிப்பழகத்தால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.சம்பவதன்று மாரியப்பன் குடித்துவர சுப்புலட்சுமி வீட்டிலிருந்த மாத்திரை எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
News December 7, 2025
விருதுநகர்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

விருதுநகர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


