News May 5, 2024

அருப்புக்கோட்டை: தீயில் எரிந்து உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் நல்ல கருங்கண் (29).இவர் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் காட்டுப் பகுதியில் கிடை அமைத்து அதில் ஆடுகளை கட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில் இந்தக் கிடையில் திடீரென தீ பிடித்து கிடையில் இருந்து 30 குட்டி ஆடுகள் தீயில் எரிந்து கருகி உயிரிழந்தன.இதுகுறித்து நல்ல  கருங்கண் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News November 11, 2025

BREAKING ராஜபாளையத்தில் 2 பேர் வெட்டிக் கொலை

image

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலின் இரவுநேர காவலாளியாக இருந்த பேச்சிமுத்து(50), சங்கரபாண்டியன்(65) ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற போது காவலர்களை தடுக்க முயன்ற போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

News November 11, 2025

ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 3 – ஆம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 10, 2025

விருதுநகர்: VOTER ID-யில் இதை மற்ற வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!