News August 6, 2025
அரியலூர்: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
Similar News
News November 7, 2025
அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நவம்பர் 8ஆம் தேதியன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றார்.
News November 7, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 6, 2025
அரியலூர்: நூலகத்தினை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட திறக்கப்பட்ட கிளை நூலக கட்டிடத்தினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடம் நூலகம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதில் நூலக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் மாணவர்கள் வாசிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


