News November 25, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வகையில், நேற்று முதல் இன்று காலை வரை அரியலூரில் 19.4 மி.மீ, திருமானூரில் 9 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 20 மி.மீ, செந்துறையில் 18.4 மி.மீ, ஆண்டிமடத்தில் 6 மி.மீ, தா.பழுரில் 3 மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 95.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News January 15, 2026
அரியலூர்: 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கும், அதனுடன் இணைந்த பார்களுக்கும், எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்களுக்கும் நாளை ஜன.16ஆம் தேதி மற்றும் வருகிற ஜன.26ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் இயங்காது என கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாட்களில் இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 15, 2026
அரியலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.
News January 15, 2026
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.


