News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News January 15, 2026
அரியலூர்: செல்வம் அருளும் விசலாட்சி உடனுறை விஸ்வநாதர்

அரியலூர் மாவட்டத்தில், சிறப்பு பெற்ற விசலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி அமைந்துள்ளது. அதில் உள்ள கால பைரவர் சன்னதியில் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து செல்வம் செழித்து வாழ்க்கை சிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News January 15, 2026
அரியலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

அரியலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
அரியலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


