News November 19, 2025
அரியலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

அரியலூரைச் சேர்ந்த ஜெகதீசன் (55) என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர். நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News January 15, 2026
அரியலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
அரியலூர்: ரயில் விபத்தில் ராணுவ வீரர் பலி – சோகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(47). இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றி வந்த இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வருவதற்காக தெலுங்கானா வாரந்தாங்கல் பகுதி அருகே வந்த போது, எதிர்பாரா விதமாக ரயில் கதவில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் இன்று மதியம் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.


