News November 3, 2025
அரியலூர்: நான்கு வழி சாலையை திறந்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (நவ.3) சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக, அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து, நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ள, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், மதனத்தூர் சாலை கி.மீ 6.8 முதல் 27.6 வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Similar News
News November 13, 2025
அரியலூர் பனை விதை நட்டு வைத்த ஆட்சியர்

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி இணைந்து பனை விதையினை நட்டு வைத்தார். மேலும் இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
News November 13, 2025
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 13, 2025
அரியலூரில் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டம், தத்தனுர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் நவ.18-ம் தேதி காலை 10மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்ப உள்ளன. மேலும் விபரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


