News October 18, 2025
அரியலூர்: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: இரண்டாம் நிலை தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான, பொதுத்தேர்வு வரும் (09.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
News November 8, 2025
அரியலூர்: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
News November 8, 2025
அரியலூர்: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233137>>பாகம்-2<<>>)


