News October 11, 2025
அரியலூர்: தார் தொட்டிக்குள் விழுந்த ஆடுகள்!

அரியலூரில் இருந்து அயனாத்தூர் செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. இந்த சாலை அருகே சாலை செப்பனிட சந்தன ஏரி கரை அருகே தார் காய்ச்சி அதில் ஜல்லிகளை சரி செய்யும் பணிக்காக பொருட்களை வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மல்லிகர் என்பவரது ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்ற பொழுது இந்த தார் தொட்டியில் விழுந்தது. இதையடுத்து அங்கு வந்த நெடுந்சாலை துறையினர் 3 ஆடுகளையும் மீட்டனர்.
Similar News
News November 19, 2025
அரியலூர்: விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரி சாலை பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் உடலை கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமியை சந்தித்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பணி (S.I.R) குறித்தும், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன் உடனிருந்தார்.
News November 19, 2025
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல், இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


