News October 11, 2025

அரியலூர்: டிராபிக் FINE-ஐ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 17, 2025

அரியலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

அரியலூர்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு

image

அரியலூர் மாவட்டம் சின்னமணக்குடி காட்டுப் பகுதியில், ஆண் மற்றும் பெண் சடலம் தூக்கில் தொங்கியவாறு இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நுரையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவி மற்றும் தலையாரிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பதும் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 17, 2025

அரியலூர்: சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம்

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், அனைத்து வங்கிகளையும் இணைத்து, மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 228555 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!