News October 1, 2025

அரியலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

அரியலூர்: ரூ.287 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம்!

image

அரியலூர் நகரில் காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நிலையில் மார்க்கெட்டிற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென கோரிக்கையை அடுத்து ரூ.287 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூஜை, தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 12, 2025

மக்கள் அச்சப்பட வேண்டாம்-அரியலூர் ஆட்சியர்

image

அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களை கண்டறியும் வகையில், சிறிய ரக வானூர்தி ஜன1ம் தேதி வரை பயன்படுத்தப்பட உள்ளது. எனவே பூமிக்கு அடியில் உள்ள கனிமங்களை அளவீடு செய்யும் வகையில், வானில் பறக்கும் சிறிய வானூர்தியை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

அரியலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!