News September 30, 2025
அரியலூர்: கனரக வாகனங்கள் நேர கட்டுப்பாடு தளர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 வரையிலும் மாலை 3 மணி முதல் 5:30 வரையிலும் நகர் பகுதி சாலைகளில் இயக்க தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. தற்போது ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கனரக வாகனங்கள் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேர கட்டுபாடு தளர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
தேசிய அளவிலான போட்டிக்கு: அரியலூர் மாணவர்கள் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவிலான போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் 33 அணிகள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்றாக அரியலூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News December 15, 2025
அரியலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

அரியலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <
News December 15, 2025
அரியலூர்: அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் மடிக்கணினி

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த மூன்று மாணவர்களுக்கு ஆட்சியர் ரத்தினசாமி மடிக்கணினி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மூன்று மாணவர்களும் மடிக்கணினி பெற்றுக் கொண்டு தங்கள் படிப்புக்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.


