News August 23, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவி மையம் திறப்பு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..
Similar News
News January 21, 2026
அரியலூரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள்

அரியலூரை பல்வேறு ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்து உள்ளனர். அதில் முக்கியமாக சங்க காலம் கி.மு.500 இருந்து கி.பி 300 வரை; பல்லவர்கள் கி.பி 6-9 வது நூற்றாண்டு; சோழப் பேரரசு கி.பி 850-1279; பாண்டியர்கள் கி.பி.1255 முதல் 1370 வரை; விஜயநகரப் பேரரசு கி.பி 1371 – 1685; பாளையக்காரர்கள் கி.பி. 1550 – 1817 அதன் பின்பு சில அரசர்களும் ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்தனர். ஷேர் பண்ணுங்க
News January 21, 2026
அரியலூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT
News January 21, 2026
ஆசியாவின் மிகப்பெரிய யானை!

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.


