News October 19, 2025
அரியலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

அரியலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 6, 2025
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 2 மி.மீ, திருமானூரில் 2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 8 மி.மீ, செந்துறையில் 2.4 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 5.4 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 2 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமாக 28.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 6, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது பெற சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை டிச-18 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


