News November 26, 2025

அரியலூர் ஆட்சியர் மகளிர் தொழில் முனைவோருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க ஆர்வம் உள்ள பெண்கள், உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி பட்டியலுடன் <>https://www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

பொங்கல் விழா கொண்டாடிய பாஜகவினர்

image

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News January 12, 2026

அரியலூரில் உள்ள மிகப்பெரிய யானை சுதை சிற்பம்!

image

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

News January 12, 2026

அரியலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

error: Content is protected !!