News November 13, 2025

அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தாலுகா நடுவலூர் பாரத மாதா ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அணைத்து தரப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர், அதேபோல், அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்களும் உரிய ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 16, 2025

அரியலூர்: இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்

image

அரியலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மூலம், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற உள்ளது. அதன்படி ஆண்டிமடம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும், இதனை ஆண்டிமடம் பகுதி மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

அரியலூர்: பாலியல் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு இராயம்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று, அந்த பெண்மணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம் இன்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!