News August 7, 2024

அரியலூரில் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 57 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். அதில் மாதம் (ரூ.2000/- வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 12 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்ட காலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.12,88,000/- வழங்கப்பட உள்ளது.

Similar News

News November 14, 2025

அரியலூர்: வெளிநாடுகளில் பயில இலவச பயிற்சி

image

அரியலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பல்வேறு வெளிநாட்டு முன்னணி பல்கலைகழகங்களில் பட்டபடிப்பு பயில சர்வதேச ஆங்கில மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ மூலம் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04329-228315 என்னை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News November 13, 2025

அரியலூர் பனை விதை நட்டு வைத்த ஆட்சியர்

image

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி இணைந்து பனை விதையினை நட்டு வைத்தார். மேலும் இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!