News May 15, 2024
அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடக்கம்

ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐ.டி.ஐ.யில் சேர்க்கை தொடங்கியுள்ளது. பல தொழில்நுட்ப பிரிவுகளில்
8ம் வகுப்பு முதல் மேற்படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம். மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.750, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. புதுமைப்பெண் திட்டம் உண்டு. மேலும் விவரங்களுக்கு 93440 149240, 88385 22077ல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 6, 2025
ஆண்டிபட்டி: நாய் குறுக்கே புகுந்து விபத்து; ஒருவர் படுகாயம்

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தர்ராஜ் (47). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டி பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது திடீரென நாய் குறுக்கே புகுந்ததில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஞானசௌந்தரராஜ் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 6, 2025
தேனியில் மின்சாரம் தாக்கி தாய், மகள் காயம்

பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வருபவர் தாரிக். இவரது மனைவி ஹரினா துணிகளை துவைத்து கொடி கம்பியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துணி உயர் மின்கம்பியில் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்ற போது ஹரினா, இவரது மகள் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால் காயமடைந்த இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை.
News December 6, 2025
தேனி: அரசு பேருந்து ஏறி இறங்கியதில் முதியவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் விஜயன் (63). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டியில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து விட்டு அரசு பேருந்தில் தேனி வந்துள்ளார். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே விஜயன் பேருந்தில் இருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.


